மன்னாதீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு நிதி வழங்கல்
ADDED :4092 days ago
புதுச்சேரி: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு நிதியை அமைச்சர் தியாகராஜன் வழங்கினார். கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் உடனுறை மன்னாதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிக்கு, இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான காசோலையை, அமைச்சர் தியாகராஜன் நேற்று காலை, கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகளிடம் வழங்கினார்.