யாத்திரைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED :4199 days ago
காஞ்சிபுரம் : அரசின் உதவித்தொகையுடன் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜெருசலேம் புனித யாத்திரை செல்ல விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை தமிழக அரசு வழங்குகிறது. அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு இந்த பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்திற்குள் சென்று வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மேம்பாட்டு பொருளாதார கழகம், 805, சென்னை - 2 என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் தெரிவித்துள்ளது.