செத்தவரை கோவிலில் திருவாசக முற்றோதல்!
ADDED :4092 days ago
செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோவிலில் திருவாசக முற்றோதல் நடந்தது. செஞ்சி தாலுகா செத்தவரை ஸ்ரீசிவ ஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள சொக்கநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, உலக நன்மை மற்றும் மழை வேண்டியும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் திருவாசக முற்றோதல் நடந்தது. காலை 6:00 மணிக்கு இடபக்கொடி ஏற்றுதலும், கோபூஜையும், சித்தர் பாத பூஜையும் நடந் தது. தொடர்ந்து சிதம்பரம், கடலுõர், புதுச்சேரி, விழுப்புரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பக்தர்களால் மாலை 5:00 மணி வரை மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதருக்கு திருவாசக முற்றோதல் நடந்தது.