தேவி கருமாரியம்மன் கோவிலில் இன்று 1,008 பால்குட ஊர்வலம்!
ADDED :4148 days ago
தங்கவயல் : தேவி கருமாரியம்மன் கோவில், 20ம் ஆண்டு ஆடிப்பெரு விழாவையொட்டி, இன்று, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. தங்கவயல், ராபர்ட்சன்பேட்டை எம்.ஜி., மார்க்கெட் பகுதியில் உள்ள, தேவி கருமாரியம்மன் கோவில், 20ம் ஆண்டு ஆடிப்பெரு விழாவையொட்டி, இன்று, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. இக்கோவிலில், நேற்று காலை, காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடைபெற்றது. இன்று காலை, 8:00 மணிக்கு, ராபர்ட்சன்பேட்டை பிரசன்ன லட்சுமி வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. சென்னை, மடிப்பாக்கம் பிரம்ம சக்தி கோவில் சார்பில், இந்த, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, 1,008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, கருமாரியம்மன், மலர் தேர்பவனி நடக்கிறது.