உலகாத்தம்மன் கோவிலில் ஆடி பொங்கல்
ADDED :4148 days ago
ஆர்.கே.பேட்டை: பெரிய நாகபூண்டி உலகாத்தம்மன் கோவிலில், நேற்று, ஆடி பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். பெரிய நாகபூண்டி, நாகேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது, உலகாத்தம்மன் கோவில். உலகாத்தம்மனுக்கு, ஆடி மாதம், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கிராமவாசிகள், பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். நேற்று காலை, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்தனர். மாலையில், மாவிளக்கு ஏற்றி அம்மனை வணங்கினர். இரவு 7:00 மணியளவில், பம்பை, உடுக்கை முழங்க, கோவில் வளாகத்தில் அம்மன் உலா வந்து எழுந்தருளினார்.