உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் வீதியுலா!

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் வீதியுலா!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா துவங்கியது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் ÷ காவில் ஆடி தேர் திருவிழாவையொட்டி கடந்த 25ம் தேதி கொடியேற்றம் நடந்தது. வரும் ஆக., 5ம் தேதி வரை இரவில் வீதியுலா உற்சவம்  நடக்கிறது. 2ம் தேதி காத்தவராய சுவாமி, ஆரியமாலா திருக்கல்யாணம் நடக்கிறது. 5ம் தேதி மாலை 4.30  மணிக்கு காத்தவராயன், சின்னான் மோடி  எடுக்கும் வைபவம்,  இரவு காத்தவராய சுவாமி கழுமரம் ஏறி மீளுதல் நிகழ்ச்சி, 6ம் தேதி காலை 9.30 மணிக்கு முத்துமாரியம்மன் திருத்தேர் வடம்  பிடித்தல்  நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் நற்குணம் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !