காரைக்காலில் விநாயகர் சிலைகள் தயார்!
ADDED :4091 days ago
காரைக்கால்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காரைக்காலில் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆகஸ்ட் ௨௯ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, காரைக்காலில் பல இட ங்களில் பெரிய அளவில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. நிரவியில் உள்ள சிலை தயாரிப்பு கூடத்தில் பேப்பர், கிழங்கு மாவு கூழ் ஆகியன மூலம், 3 அடி முதல் 12 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக நடக்கிறது. ஆஞ்சநேயர், சிங்க வாகனம், மூஞ்சுறு, ரிஷப வாகனம், சிவலிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் என, பல வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப் பட்டுள்ளது.