விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் சரஸ்வதி ஹோம பூஜை!
ADDED :4184 days ago
சிவகங்கை : சிவகங்கை, விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சரஸ்வதி ஹோமம் நடந்தது. பிள்ளைவயல் ஆர்ச் அருகே உள்ள விஷ்ணுதுர்க்கை அம்மன் கோயிலில், கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன், ஆடிப்பூர திருவிழா துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஹோமம், ஆராதனை நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான, நேற்று காலை 9 மணிக்கு, சரஸ்வதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, தங்க அங்கியில், அம்மன் காட்சி அளித்தார். நேற்று மாலை 6 மணிக்கு, நவசண்டி யாகம் துவங்கியது. இன்று, துர்க்கா ஹோமம், பால்குடம் அபிஷேகம் நடைபெறும். இரவு அம்மன் திருவீதி உலா நடைபெறும். இன்று பகல் 1 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படும்.