மானாமதுரையில் ஆடித்தபசு!
ADDED :4187 days ago
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் ஆலய ஆடித்தபசு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனும் சுவாமியும் வீதியுலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்ப பல்லக்கு ஆகஸ்ட் 6ம் தேதியும் ஆடித்தபசு 7ம் தேதியும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானீகர் அழகியசுந்தரபட்டர்,தேவஸ்தான கண்காணிப்பாளர் வரதராஜன்,மேலாளர் இளங்கோ மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.