புரவி எடுப்பு திருவிழா!
ADDED :4131 days ago
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ளது நவத்தாவு கிராமம். மழையை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. சுமார் 100 ஏக்கரில் நெல் விளையும். கடந்த ஐந்து வருடங்களாக மழை இல்லாததால் விவசாயம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.இந்தாண்டு குடிக்க கூட கண்மாயில் தண்ணீர் தேங்கவில்லை. அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்த தீர்மானித்து கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஒரு வாரம் விரதமிருந்து நேற்று காலை மானாமதுரை வேளார் தெருவில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.முன்னதாக புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஆறு புரவிகள் அய்யனாருடனும், ஒரு காளை வாகனமும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.கண்மாய்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோயிலை வந்தடைந்தது. புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.