உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குணசீலம் கோவிலில் லட்சார்ச்சனை விழா

குணசீலம் கோவிலில் லட்சார்ச்சனை விழா

திருச்சி: குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், 19வது ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. திருச்சி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், உலக அமைதிக்காக, பிரசன்ன வெங்கடேச பாதுகாப்பு சேவா சமிதி சார்பில், லட்சார்ச்சனை விழா, நடந்தது. முதல் நாளில், மூலவருக்கு சந்தன காப்பு, உற்சவருக்கு தீப அலங்கார சேவை, கருட சேவை ஆகியவை நடந்தது. இரண்டாம் நாளில் திருமஞ்சன ஊர்வலமும், லட்சார்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. லட்சார்ச்சனையை யொட்டி, மாதர் மண்டலியினர் சார்பில், ஸ்ரீமந் நாராணீயம் பராயாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !