சிவன் கோவிலில் மண்டலாபிஷேகம்
ADDED :4083 days ago
அரியலூர்: நாகமங்கலம் சிவன் கோவில் மண்டலாபிஷேகம் நடந்தது. அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தில் பிரசன்ன நாயகி உடனுறை நாகேஸ்வர ஸ்வாமி சிவன் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில் திருப்பணி முடிந்து, கடந்த மாதம், 8ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கடந்த, 26ம் தேதி, நாகமங்கலம் நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. அதையொட்டி பன்னீர், சந்தனம், விபூதி, ஜவ்வாது, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால், ஸ்வாமி அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில், அரியலூர் மணிவாசக மன்றத்தின் செயல் தலைவர் தங்கவேலு, வைத்திலிங்கம், டாக்டர் மணிவண்ணன், கொளஞ்சி முன்னிலை வகித்தனர்.