உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆக.,2,3ல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆக.,2,3ல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், ஆக., 3ம் தேதி, ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ஆக.,2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சேலத்தில் இருந்து, பவானி, கந்தாஸ்ரமம், பேளூர், காரவள்ளி, கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கும், நாமக்கல்லில் இருந்து கொல்லிமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.அதேபோல், பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் வழியாக கொடுமுடிக்கும், திருச்செங்கோட்டில் இருந்து பவானி வழியாக கொடுமுடிக்கும், சங்ககிரியில் இருந்து பவானிக்கும், ராசிபுரத்தில் இருந்து கொல்லிமலை வழியாக காரவள்ளிக்கும், காரவள்ளியில் இருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கும், இடைப்பாடியில் இருந்து மேட்டூருக்கும், பூலாம்பட்டியில் இருந்து கல்வடங்கத்துக்கும், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !