ராமேஸ்வரம் அம்மனுக்கு "மஞ்சள் நீராட்டு!
ADDED :4088 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ஆடித்திருக்கல்யாண விழா ஜூலை 21ம் தேதி, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாள் விழாவான நேற்று, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. சிறுமிகள் பலர் கன்னி பெண் வேடமணிந்து, அம்மனுக்கு ஆரத்தி எடுத்து, உணவு பயிறு வகைகளை அபிஷேகம் செய்து, மடி நிரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.