உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம்: பூட்டை கோவிலில் 8ம் தேதி திருவிழா!

சங்கராபுரம்: பூட்டை கோவிலில் 8ம் தேதி திருவிழா!

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் தேர் திருவிழா வரும் 8ம் தேதி துவங்குகிறது. சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் மாரி யம்மன் கோவில் தேர்திருவிழா வரும் ஆக., 8ம் தேதி துவங்குகிறது. அன்று காலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், பகல் 12 :00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு அம்மன் முத் துபல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் (9ம் தேதி) மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை பூட்டை, செம்பராம்பட்டு, பாவளம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !