உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லை பிடாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு!

எல்லை பிடாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு!

தியாகதுருகம்: வடதொரசலூர் எல்லை பிடாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரித்து வீதியுலா நடந்தது. மாரியம்மன் சரித்திர பாடல் சொற்பொழிவு நிகழ்ச்சி, கோவிலில் நிகழ்த்தப் பட்டது. திருவிழாவில் ஒருபகுதியாக, எல்லை பிடாரியம்மன் கோவிலில் பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், மாவிளக்கு தீபம் ஏற்றி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவமும் நாளை (1ம் தேதி) மாலை 4 மணிக்கு தீமிதி விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !