உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீசுவரர் கோவிலில் ஆடிப்பூர விழா!

கடலூர் பாடலீசுவரர் கோவிலில் ஆடிப்பூர விழா!

கடலூர் பாடலீசுவரர் கோவிலில் நேற்று நடந்த ஆடிப்பூர விழாவில் சுமங்கலி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஆடிப்பூரம்ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பாளுக்கு உகந்த தினமாகும் என்பதால், அன்றைய தினத்தில் சுமங்கலி பெண்கள் அம்பாளுக்கு தாலிச்சரடு மற்றும் வளையல் படைத்து வழிபடுவது குடும்பத்துக்கு நல்லது என்பது ஐதீகமாகும்.இதனால் ஆடிப்பூரம் தினமான நேற்று சிவன் கோவில்களில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது, இதில் சுமங்கலி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.சுமங்கலிகள் வழிபட்டனர்கடலூர் பாடலீசுவரர் திருக்கோவிலிலும் ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி காலையில் மூலவருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு ஆராதனையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதன்பிறகு பெரியநாயகி அம்பாளுக்கு சுமங்கலி பெண்கள் மஞ்சள்குங்குமத்துடன், தாலிச்சரடு, வளையல் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். இதேப்போல் குழந்தையில்லாத பெண்களும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர்.இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களுக்கு வெற்றிலை, பாக்குடன் தாலிச்சரடு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டது. இதன்பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !