உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பிகா பரமேஸ்வரி கோவில் ஆடித்திருவிழா!

அம்பிகா பரமேஸ்வரி கோவில் ஆடித்திருவிழா!

தர்மபுரி: தர்மபுரி கடைவீதியில் உள்ள அம்பிகா பரமேஸ்வரி அம்மன், விருந்தாடி அம்மன், 38ம் ஆண்டு ஆடி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த, 28ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று, முன்தினம் காலை மாரியம்மன் கரகம் திருவீதி உலா நடந்தது. 12 மணிக்கு விருந்தாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சக்தி அழைப்பு நடந்தது. மதியம், ஒரு மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, வேப்பமரத்து மாரியம்மன் அலங்காரம் நடந்தது. நேற்று, அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, புற்றுமாரியம்மன் அலங்காரமும், இன்று காலை, 10 மணிக்கு பால் அபிஷேகமும், மாலை வெள்ளி கவச அலங்காரமும், பூச்சாட்டுதலும் நடக்கிறது. வரும், 1ம் தேதி அம்பிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, காசி அன்னபூரணி அம்மன் அலங்காரமும், காலை, 10 மணிக்கு மறுபூஜையும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, 2ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், திருவீதி உலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !