அரசமங்கலம் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம்!
ADDED :4209 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு விஷ்வரூப தரிசனமும், 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடந்த வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெங்கடேஷ் பாபு பட்டாச்சாரியார் தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.