உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெரூர் அக்னீஸ்வரர் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி!

நெரூர் அக்னீஸ்வரர் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி!

கரூர்: கரூர் அருகே பழமை வாய்ந்த நெரூர் அக்னீஸ்வரர் கோவில் கோபுரம், புதுப்பிக்கும் பணி பல ஆண்டுகளாக நடக்கிறது. முருகப்பெருமான், அசுர வதத்துக்கு சென்று வந்ததால், போர் கோலத்திலும், 12 கைகள், ஆறு முகங்களுடன் தனியாக கோவில் கொண்டுள்ளார். அம்பாள் சவுந்தரநாயகிக்கு வடபுறத்தில் தனியாக கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், ஆயிரம் ஆண்டுகளை கடந்ததால், பாழடைந்து காணப்பட்டது. ஹிந்து சமய அறநிலை கட்டுப்பாட்டில் உள்ள கோவில், அக்னீஸ்வரர் வழிபாட்டு மன்றம் சார்பில், ஊர் பொது மக்கள் நிதியுடன், கோவில் புதுப்பிக்கும் பணி கடந்த, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கிறது. அக்னீஸ்வரர், முருகப்பெருமான், அம்பாள் ஆகிய மூன்று ஸ்வாமிகளுக்கும் தனித்தனியாக கோவில் கட்டப்படுகிறது. கோவில் முழுவதும் கற்களால் கட்டப்படுகிறது. நிதி பற்றாகுறை காரணமாக, கோவில் கட்டும் பணி கடந்த ஏழு
ஆண்டுகளாக நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் முருகேசன், கூறியதாவது: அக்னீஸ்வரர் கோவிலுக்கு கரூர், ஈரோடு, காங்கேயம், சேலம், சங்ககிரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். கோவில் பழுதடைந்து விட்டதால், ஏழு ஆண்டுகளுக்கு முன் கோவில் கட்டும் பணி நடக்கிறது. ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், எவ்வித நிதி உதவியும் வழங்கப்படவில்லை. பக்தர்களின் நிதியுதவியுடன் கோவில் கட்டும் பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம், 28ம் தேதி நாத உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !