ஆடிப்பூர திருவிழாவில் வளையல் அலங்காரம்!
ADDED :4311 days ago
துறையூர்: துறையூர் ராமலிங்க சவுண்டீஸ்வரி அம்மனுக்கு, ஆடிப்பூர விழாவையொட்டி, வளையல் அலங்காரம் செய்து வழிபட்டனர். சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா நடந்தது. அதிகாலை, 6.30 மணிக்கு மூங்கில் தெப்பக்குளத்திலிருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 6,001 வளையல்கள் சாற்றி அலங்காரம் செய்தனர். அம்மனை பூஜித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை புஷ்ப மின் அலங்காரத்தில், அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.