சங்கராபுரம் கோவில்களில் ஆடி வெள்ளி உற்சவம்!
ADDED :4394 days ago
சங்கராபுரம்: ஆடி வெள்ளியை முன்னிட்டு சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவில், அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவில் மற்றும் காட்டு வனஞ்சூர் மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளி உற்சவம் கொண்டாடப் பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் கஞ்சி கலய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. ஊர்வலத்தில் வெங்கடேச பாகவதர், நடராஜய்யர், அன்பழகன், கண் ணன், சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.