சின்னசேலம் கோவிலில் பால்குட ஊர்வலம்!
ADDED :4395 days ago
சின்னசேலம்: சின்னசேலம் முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. சின்னசேலம் முத்துமாரியம்மன் கோவிலில் 20ம் ஆண்டு பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை 8:30 மணியளவில் பெருமாள் கோவிலிலிருந்து பக்தர்கள் பலரும் அக்னி சட்டி, பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். சிவன் கோவில் வீதி, புதிய பஸ் நிலையம், கடை வீதி, ஆஸ்பிட்டல் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி பூபல்லக்கில் முத்துமாரியம்மன், சந்தானகிருஷ்ண அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.