உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயகி அன்னை ஆலய வெள்ளி விழா!

பெரியநாயகி அன்னை ஆலய வெள்ளி விழா!

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த கோனத்தாங்கொட்டாய் பெரியநாயகி அன்னை ஆலய 25ம் ஆண்டு வெள்ளி விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை ஆலயத்தை புதுபித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 12 மணிக்கு அருட்திரு மகிமை தலைமையில் சிறப்பு ஆலய வழிபாடு நடந்தது.அன்னை பெரிய நாயகி தேர் வீதியுலா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தொன்போஸ்கோ, காரியகாரர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டனர். ஆலய குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !