உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்!

அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர்!

செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூட்டம் அலை மோதுவது வழக்கம். விடுமுறை நாளான நேற்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் நேர்த்தி கடன் செலுத்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்.அம்மனுக்கு பொங்கல் வைத்து, மொட்டையடித்து, குழந்தைகளுக்கு காது குத்தினர். சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டனர்.மேல்மலையனூரில் கோவில் அருகே வரை வாகனங்களை அனுமதித்ததால் கோவிலுக்கு செல்லும் ஒத்தவாடை தெருவிலும், கொடுக்கன்குப்பம் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !