அவலூர்பேட்டை ஆடி திருவிழா!
                              ADDED :4105 days ago 
                            
                          
                           அவலூர்பேட்டை: சிறுதலைப்பூண்டி கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள பூண்டியம்மன், பொன்னியம்மன், கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. மறுநாள் (2 ம் தேதி) இரவு அம்மன் தாலாட்டும், 3ம் தேதி காலையில் பால் அபிஷேகம், கரகாட்டம், பக்தர்கள் பறந்து சென்று அம்மனுக்கு மாலை சூட்டுதலும், மாலையில் தீமிதி நிகழ்ச்சிகளும் நடந்தன. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.