உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரெடிட் கார்டு இருக்கா!

கிரெடிட் கார்டு இருக்கா!

நல்ல வார்த்தைகள் காதில் விழுவது மிகவும் குறைந்து போய் விட்ட இந்தக் காலத்தில், ஏதோ...எங்களாலான முயற்சி...நாலு நல்லவார்த்தையும் காதில் விழட்டுமே!வாழ்க்கையில் நாம் வாங்கக்கூடாத ஒன்று கடன். ஆனால், நம்மை கடனாளி ஆக்குவதற்கு மனிதர்கள் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள்? தேவை இருக்கிறதோ, இல்லையோ நமக்கு கிரெடிட் கார்டு வழங்குகிறார்கள். நம் தேவைக்கு மேல் கடன் அளிக்கிறார்கள். தவணை முறையில் சாமான்களை வாங்க வைத்து, நம்முடைய ஆசைகளைத் துõண்டி விடுகிறார்கள். கடைசியில், நாம் துõண்டிலில் மாட்டிய மீன் போல துடிக்கிறோம்; அதிகமாக கடன் வாங்கி, அதல பாதாளத்தில் தள்ளப்பட்ட மக்களைப் பற்றி நாம் படித்தும் கூட, சாணக்கிய நீதியையோ, திருவள்ளுவரையோ, நம் முன்னோர்களின் அறிவுரைகளையோ நாம் மறந்து விடுகிறோம். சதுப்பு நில புதைகுழிக்குள் மாட்டி கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்து கீழே சென்று வெளி வரமுடியாமல் தவிப்பது போல தவிக்கிறோம்.சாணக்கிய நீதி நுõலில் உள்ள ஒரு ஸ்லோகத்தைக் கேளுங்கள் ரிணசேஷஸ்சாக்னிசேஷோ வியாதிசேஷச்ததைவ ச! புனஸ்ச வர்ததே யஸ்மத்தஸ்மாச்சேஷம் ந ரக்ஷயேத்!! இதன் பொருள் இது தான்.கடனை முழுவதுமாகத் திருப்பி கொடுத்து முடித்து விடவேண்டும். அதே போல, நெருப்பை முழுவதும் அணைத்து விடவேண்டும்; வியாதியின் அடிப்படைக் காரணத்தை கண்டுபிடித்து சரி  செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், இவை திரும்பத் திரும்ப முளைத்து வரும். இலங்கையில் போர்க்களத்தில் ராவணனின் மனநிலையை, கடன்பட்டவர்கள் நெஞ்சம் எப்படி மிகுந்த வெட்க நிலையில் இருக்குமோ, அதனுடன் ஒப்பிட்டு உவமை சொல்லப்படுகிறது. கிரெடிட் கார்டை தவிர்ப்பது போன்றவை நிகழ்காலத்திற்கு ஒத்து வராது என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால், கடன் என்பது மிகவும் பயங்கரமான ஒரு பூதம் என்பதை நாம் மனதின் ஆழத்தில் நிரந்தரமாக பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம். சரி...கடன் வாங்கியாச்சு! அதன் தொல்லையில் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா! பஞ்சாங்கத்தில் மைத்ர முகூர்த்தம் நாட்கள் இருக்கிறது. பெரிய பெரிய கடன்கள் இருந்தால் கூட, மைத்ர முகூர்த்த நேரத்தில் சிறிய சிறிய தொகையாகத் திருப்பி கொடுங்கள். கூடிய சீக்கிரமே, கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள் என்று உரைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜய தமிழ் புத்தாண்டில் இனிவரும் மைத்ர முகூர்த்த நாட்கள் மற்றும்
நேரத்தைக் கவனிப்போமே!
    தேதி           கிழமை                   நேரம்
  05.8.14     செவ்வாய்     மதியம்     12.44 - 2.44.
  02.9.14     செவ்வாய்     காலை     11.04 - 1.04
  12.9.14     வெள்ளி     இரவு     8.20   -10.20
  29.9.14     திங்கள்     காலை     9.44   - 11.44.
  9.10.14     வியாழன்     மாலை     6.30   - 8.30.
26.10.14     ஞாயிறு     காலை     7.34   -9.34
05.11.14     புதன்     மாலை     6.36   -இரவு 8.36
23.11.14     ஞாயிறு     காலை     6.20   - 8.20
03.12.14     புதன்     மதியம்     3.04   - மாலை 5.04
20.12.14     சனி     காலை     4.16   - 6.16
30.12.14     செவ்வாய்     மதியம்     1.00   - 3.00
  27.1.15     செவ்வாய்     மதியம்     12.44 - 2.44
  23.2.15     திங்கள்     காலை     10.40  - மதியம் 12.40
  23.3.15     திங்கள்     காலை     6.34   - 8.06
    8.4.15     புதன்     இரவு     8.24   - 10.24

கடன்களை அடைக்க வழி சொல்லியாச்சு! வேகமாக அடைச்சுட்டு, கிரெடிட் கார்டை மொத்தமாக வெட்டி துõர எறிஞ்சுடுங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !