உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு நகர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா

குரு நகர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா

நெட்டப்பாக்கம்: மடுகரை குரு நகரில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப்பூர நட்சத்திரப் பெருவிழா நடந்தது. இதையொட்டி, எம்பெருமான் மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், பெரிய திருவடி, சிறிய திருவடி மூர்த்திகளுக்கு அபிஷேகப் பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், இளநீர், எலுமிச்சை பழம், பன்னீர், தேன், கரும்பு, பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஆண்டாளுக்கு மலர் அலங்காரம் செய்து, 24 தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !