திரவுபதையம்மன் கோயில் பூக்குழி விழா துவக்கம்!
ADDED :4079 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதையம்மன் கோயில் பூக்குழி விழா காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து பிச்சனார்கோட்டை, பெத்தார் தேவன்கோட்டை, கீழக்கோட்டை கிராமத்தார்களின் மண்டகபடியாக வீமன் ஊர்வலம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஆக.22ல், பூக்குழி விழாவுடன் நிறைவடைகிறது.