மரக்காணம் பக்தர்கள் வேதனை!
ADDED :4090 days ago
மரக்காணம் : மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் தேர் இல்லாததால் 14 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடக்க வில்லை. புதிய தேர் செய்ய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர் கோவில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. கோவிலின் பழமையான தேரில் பிரம்மோற்சவ காலத்தில் பூமீஸ்வரர் வீதியுலா வந்தார். இந்த தேர் 1995ம் ஆண்டு முதல் பாதுகாப்பின்மை, இயற்கை இடர்பாடு உள்பட பல காரணங்களால் சிதலமடைந்தது. தேரின் முக்கிய பாகங்கள் திருடு போனது. இதனால் 2000ம் ஆண்டு முதல் கோவிலில் தேர் இல்லை. பிரமோற்சவமும் 14 ஆண்டுகளாக நடக்கவில்லை. கோவிலுக்கு புதிய தேர் உருவாக்கி மீண்டும் பிரமோற்சவம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.