உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

முத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா

விழுப்புரம் : விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி ரோடு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது. கடந்த 31ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏழு நாட்கள் நடந்த விழாவில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 8ம் தேதி காலை 8 மணிக்கு அலகு குத்துதலும், பகல் 2 மணிக்கு தேர் திருவிழா மற்றும் மாலை 6 மணிக்கு தொட்டில் செடல் நிகழ்ச்சி நடந்தது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., பங்கேற்று தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் அற்புதவேல், முருகன், தியாகராஜன், கனகராஜ், கணேஷ்சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !