சிறுவங்கூர் ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கள்ளக்குறிச்சி : சிறுவங்கூர் அறம்வளர்த்தநாயகி உடனுறை ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் எழுந்தருளிய ஆபத்சகாய ஈஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 8ம் தேதி துவங் கியது. 9ம் தேதி இரண்டாம் கால வேள்வி பூஜை நடத்தி, அரசமர விநாயகர், மாரியம்மன், திரவுபதி அம்மன், அய்யனார், செல்லியம்மன், செல்வ வினாயகருக்கு நன்னீராட்டு விழா, மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது.நேற்று காலை சித்தி விநாயகர், கன்னிமூல கணபதி, சுப்ரமணியர், கோட்ட மூர்த்திகள், பரிவார தெய்வங்கள், அறுபத்து மூவர்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா, நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 7:45 மணிக்கு கும்ப கலசங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று 8:00 மணிக்கு கோவில் விமானங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. வேள்வி பூஜைகளை கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசர் திருமடத்தினர் செய்தனர்.