காளிகாம்பாள் கோயிலில் ஆவணி அவிட்டம்!
ADDED :4091 days ago
பழநி : பழநி அடிவாரத்தில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் விஸ்வஹர்மா குழு சார்பில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். ரெட்டியார்சத்திரம்: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், பூணூல் விழா நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், ஏகாந்த சேவை நடந்தது. சிறப்பு பூஜையில் பங்கேற்ற பலர், பூணூல் அணிந்து வழிபட்டனர்.