உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிடப்பில் போடப்பட்ட அரங்கனூர் கோவில் திருப்பணி!

கிடப்பில் போடப்பட்ட அரங்கனூர் கோவில் திருப்பணி!

பாகூர்: அரங்கனூர் முத்தாலம்மன், எரமுடி ஐயனார் கோவில்களின், திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை  வைத்துள்ளனர். பாகூர் அடுத்துள்ள அரங்கனூரில் பழமை வாய்ந்த முத்தாலம்மன், எரமுடி ஐயனார் கோவில்கள் உள்ளன. இக்கோவிலுக்கு  கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையில், பல ஆண்டுகளாக  புதுப்பிக்கப்படாமல் இருந்து வந்தது.  இந்நிலையில், இந்த இரு  கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, கடந்த ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. அதன்பின்பு, முதற்கட்டமாக இரண்டு  கோவில்களுக்கும்  முன் மண்டபம் கட் டும்  பணிக்கு, அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. அதன்பின்பு, இதுவரை எந்த பணிகளும் நடைபெறாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அஸ்திவாரத்திற்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகள் துரு பிடித்து வீணாகி வருகின்றன.எனவே, அர ங்கனூர் முத்தாலம்மன், எரமுடி ஐயனார் கோவில்களின் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !