உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றி அம்மனுக்கு சீர்வரிசை உற்சவம்!

தான்தோன்றி அம்மனுக்கு சீர்வரிசை உற்சவம்!

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், தான்தோன்றி அம்மன் கோவிலில், ஆடி மாத தீ மிதி திருவிழாவினை முன்னிட்டு, நான்காம் நாள் உற்சவமான  நேற்று காலை, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில், பழமையான தான்தோன்றி அம்மன்  கோவில் அமைந்துள்ளது. அங்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆடி மாதம், தீ மிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 8ம்  தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இந்நிலையில், நான்காம் நாள் உற்சவமான நேற்று, வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் சார்பாக,  அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு, அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !