சிக்கம்மன் சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா
ADDED :4232 days ago
ஊட்டி : ஊட்டி அருகே முள்ளிக்கொரையில் உள்ள, அருள்மிகு சிக்கம்மன் சித்தர் பீடத்தில், 39வது ஆடிப்பூர பெருவிழா நடந்தது. கோபால்சாமி அடிகளார் முன்னிலையில், கடந்த 10ம் தேதி துவங்கிய நிகழ்ச்சியில், ஆராட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஆற்றங்கரையில் இருந்து தீச்சட்டி, பறவைக் காவடி ஊர்வலம் நடந்தது. பின், கரக ஊர்வலமும் நடத்தப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, முள்ளிக்கொரை ஊர், விழா கோலம் பூண்டிருந்தது.