கோகுலாஷ்டமி கொண்டாட்டம்
ஈரோடு: பல்வேறு பள்ளிகள் சார்பில், ஈரோட்டில் நடந்த கோகுலாஷ்டமி விழா கொண்டாட்டத்தில், பள்ளி குழந்தைகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. "காலைக்கதிர் சார்பில் அறிவிக்கப்பட்ட போட்டியில் பங்கேற்க, பல்வேறு பள்ளிகள் ஆர்வத்துடன் குழந்தைகளை தயார்படுத்தினர். கிருஷ்ணர், மாயக்கண்ணன், ராதை, குழல் ஊதும் கண்ணன் என பல வேடங்களில் குழந்தைகள், கிருஷ்ணரை நேரில் காணும்படி உள்ளத்தை உருக்கினர்.
* ஈரோடு, சூரம்பட்டி இந்து கல்வி நிலையத்தில், நடந்த போட்டியில், அழகாக வேடமிட்டு, பாசுரம் பாடச் செய்தனர். அங்கு சென்ற நமது குழுவினர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பரிசுக்கான குழந்தையை தேர்வு செய்தனர். போட்டியில், நான்கு முதல் ஆறு வயதுடையோர், கண்ணன், ராதை வேடம் அணிந்தும், ஏழு முதல், பத்து வயதுடையோர், வேடத்துடன், ஒரு பாசுரமும் கூற வேண்டும். 11 முதல், 14 வயதுடையோர், கிருஷ்ணர் லீலைகளில் ஏதாவது ஒன்று, அல்லது பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம் கூற வேண்டும், என அறிவிக்கப்பட்டிருந்தது. குழந்தைகளின் பாசுர உச்சரிப்பு, அலங்காரம், தனித்துவம் போன்றவை மூலம், பரிசுக்கான குழந்தைகள் தேர்வானார்கள். இப்பள்ளியில், 68 குழந்தைகள் பங்கேற்றன. இதில், நான்கு முதல், ஆறு வயதுடையோர் பிரிவில், யாழினி, நிஷாந்த், முகம்மது அஜிஷ் ஆகியோரும், ஏழு முதல், பத்து வயது பிரிவில், அபிஷேக், மவுசினி, செந்தூர்வர்ஷனும் முதல் மூன்று பரிசை வென்றனர்.
* இடையன்காட்டுவலசு, இந்து கல்வி நிலையத்தில், 41 குழந்தைகள் பங்கேற்றனர். மிகச்சிறுவர்களில், தரணிக்கண்ணன், பூர்ணரக்ஷா, வேங்கடநாதனும், ஏழு முதல், பத்து வயது பிரிவில், கிஷோர்குமார், ஸ்ரீகீர்த்தி, அமிர்தவர்ஷினும் முதல் மூன்று பரிசை வென்றனர். மேலும், தர்ஷ், மவுனிஷ்குமார், தேஜஸ்வினி, ஜெய்ஸ்ரீதர், தருண் மற்றும் காருண்யா நேத்ரா ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.
* மாமரத்துப்பாளையம், இந்து கல்வி நிலையத்தில், 120 குழந்தைகள் பங்கேற்றனர். மிகச்சிறுவர் பிரிவில், சாருநேத்ரா, யோகிதா, நிஷாந்த், இரண்டாவது பிரிவில், பிரியதர்ஷன், சிபிராஜ், ஷர்மிதா, மூன்றாவது பிரிவில், சஞ்சய் விக்ரம், தனலட்சுமி ஸ்ரீவள்ளி, ஹஷினிதா ஆகியோர் முதல் மூன்று பரிசை வென்றனர். மேலும், ரோகித், வசிராசிம்ரா, கீர்த்தனாம்பிகா, ஸ்ரீனேஷ், நிதிஷ், குருசரண், சுதர்ஷனம், மிதுன், ஹிருத்திக்ராஜா, விஷால், கிரிக்ஷித், பாலமுருகன், ருர்ஷிதா, அபிநந்தனா, மயூரி ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில், இன்று, கருங்கல்பாளையம் தி டிவைன் நர்சரி அன்ட் பிரைமரி பள்ளி, வீரப்பன்சத்திரம் வினாயகா வித்யா பவன் நர்சரி அன்ட் பிரைமரி பள்ளி, வீரப்பன்சத்திரம் ஸ்ரீஜனனி மெட்ரிக்குலேஷன் பள்ளி, சூரம்பட்டி வலசு செங்குந்தர் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, வில்லரசம்பட்டி ஸ்ரீமாருதி வித்யாபவன் பள்ளி, திண்டல் வேளாளர் மகளிர் உயர்நிலைப்பள்ளி குழந்தைகள் பங்கேற்கின்றனர்.