உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.நகர் ராகவேந்திர சுவாமி கோவிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு!

தி.நகர் ராகவேந்திர சுவாமி கோவிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு!

தி.நகர் : ராகவேந்திர சுவாமிக்கு, 343வது ஆராதனை சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. தி.நகர், ராகவையா சாலை, கிருஷ்ண ராகவேந்திர மடத்தில், கடந்த 11ம் தேதி, ’பூர்வ ஆராதனை’யோடு விழா துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு, பஞ்சாமிர்த அபிஷேகம், புஷ்ப அலங்கார பூஜை, மகா பூஜை, உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன.மாலையில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இரவில் பல்லக்கு உற்சவம், ரதோற்சவம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாடு நாளை நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !