திருக்கோவிலூர் ராகவேந்திர சுவாமி ஆலயத்தில் ஆராதனை விழா!
ADDED :4181 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திர சுவாமி ஆலயத்தில் ஆராதனை விழா நடந்தது. ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மங்கள ஆரத்தி, 7 மணிக்கு மேட்டூர் சஞ்சீவி, முரளி சகோதரர்களின் பஜனை நடந்தது. கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். திண்டிவனம் திண்டிவனம் ராகவேந்திரர் தியானமண்டபத்தில் ஆராதனை விழா நடந்தது. இதையொட்டி அவருடைய திருவுருவ சிலைக்கு, மங்கள இசையுடன் மகா அபிஷேக ஆராதனைகள் நடந்தது.