பாபநாசம் பாலைவன நாதர் பவுர்ணமி கிரிவலம் துவக்கம்
ADDED :4175 days ago
பாபநாசம்: பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை தேவார பாடல் பெற்ற தலமான தவளவெண்கை உடனருளும் பாலைவனநாதர் கோவிலில், பவுர்ணமி கிரிவலம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், திருவடிகுடில் சாமிகள் தலைமை வகித்து, கிரிவலத்தை துவக்கி வைத்தார். கிரிவலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பால், தயிர் சாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பாபநாசம் ஆன்மீக பேரவையினர் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்தனர். நிகழ்ச்சியில், தீர்த்தமலை சுவாமிகள், பாபநாசம் எம்.எல்.ஏ. துரைகண்ணு, பாபநாசம் யூனியன் தலைவர் கோபிநாதன், சிறைத்துறை கண்காணிப்பாளர் உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.