உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி!

விருதுநகர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி!

விருதுநகர் : விருதுநகர் ரயில்வே காலனி முத்து மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா, ஜூலை 21ல் தொடங்கியது. அதன் பின் காப்பு கட்டி, முளைப்பாரி அமைத்தனர். தினமும் சுவாமிக்கு பால்குடம், தீர்த்தம், சந்தனகுடம் எடுத்து வருதல் நடந்தது. நேற்று முன் தினம் காலை பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர். இரவு அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலர் வந்தார். @நற்று கோயிலில் அக்னி வர்த்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்தனர். பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !