தீப்பாச்சியம்மன், கருப்பமாமி கோயில் திருவிழா!
ADDED :4172 days ago
வடமதுரை : வெள்ளபொம்மன்பட்டி தீப்பாச்சியம்மன், பாப்பாத்தியம்மன, கருப்பமாமி, மதுரைவீரன், பட்டவன் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. பிறந்த வீட்டு பிள்ளைகள் சார்பாக தீப்பாச்சியம்மனுக்கு பொங்கல் வைத்தலுடன் விழா துவங்கியது. இரண்டாம் நாள் வெள்ளபொம்மன்பட்டி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி அழைப்பும், தொடர்ந்து பொங்கல் வைத்து, நேர்த்திக்கடனுக்காக கிடாய் வெட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மூன்றாம் நாள் மதுரை வீரனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.