மீனம்பூர் விநாயகர் கோவில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :4169 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா மீனம்பூர் கிராமத்தின் சுந்தரவிநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்து வரும் 14ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, பிரவேச பலி, கலச பூஜை, இரவு 9 மணிக்கு யந்திர பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 14ம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜை, கணபதி மூலமந்திர ஹோமம், தம்பதி பூஜை, தத்து வார்ச் சனை, மகா தீபாராதனை, 8.15 மணிக்கு கடம் புறப்பாடு, 8.40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனம்பூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.