தேசம்மன் கோவிலில் ஆடிப்பூரம்
ADDED :4170 days ago
நகரி : தேசம்மன் கோவிலில், நேற்று நடந்த நான்காவது வார ஆடிப்பூர விழாவை முன்னிட்டு சிறப்பு உற்சவ நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நகரி அடுத்த டி.ஆர்.கண்டிகையில், தேசம்மன் கோவிலில், நேற்று நான்காவது வார ஆடிப்பூர விழா நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காலை, 8:00 மணி முதல், மாலை, 6:30 மணி வரை, நகரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இதுதவிர, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வந்து அம்மனை தரிசித்தனர்.