உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா!

விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா!

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா நடந்தது. கடந்த 11ம் தேதி துவங்கிய பூ ர்வஆராதனைவிழாவில் காலை 8:00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 4:30 மணிக்கு லட்சுமிசத்யநாராயண பூஜையும் நடந்தது. 12ம் தேதி  நடந்த மத்யம ஆராதனை விழாவில் காலை 5:00 மணிக்கு ராகவேந்திரர், விஷ்ணு ஸ்தோத்ரம் நடந்தது. காலை 7:30 மணிக்கு ராகவேந்திரருக்கு அபி ஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவித்தனர்.  காலை 8:30 மணிக்கு கனகசேவை, விளக்கு பூஜை, லட்சார்ச்சனையும் நடந்தது. நேற்று நடந்த  உக்கிர ஆராதனை விழாவில் காலை 8:00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு குருஜிராகவேந்திராச்சாரர் அருளுரை  நிகழ்த்தினார். இரவு 8:00 மணிக்கு ரதம், பல்லக்கில் ராகவேந்திரர் கோவிலை வலம் வந்தார். ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீராகவேந்திர சுவாமி  ஆராதனைவிழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !