பத்திரகாளியம்மன், தர்மமுனீஸ்வரர் கோயில்களில் பொங்கல் விழா!
ADDED :4184 days ago
கீழக்கரை : கீழக்கரை ஸ்ரீநகர் பத்திரகாளியம்மன், தர்மமுனீஸ்வரர், விநாயகர் கோயில்களில் ஆடி பொங்கல் விழா நடந்தது. ஆக., 5ல் காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று மாலை, பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம், வேல்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள் பொங்லிட்டனர். ஸ்ரீநகர் பொதுநலச்சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.