திருச்செங்கோட்டில் மழை வேண்டி வர்ண ஜெபம்!
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வருண ஜப யாகம் நடந்தது.கோவில் குருக்கள் ராஜப்பா தலைமையில், 12 சிவாச்சார்யர்கள் பங்கேற்று, இடுப்பு அளவு தண்ணீரீல் நின்று வருண பகவானுக்குரிய, ஒரு லட்சம் ஆவர்த்திகளை ஓதினர். பூஜையில் திருமலையில் உள்ள கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், துர்க்கை தீர்த்தம், நாகதீர்த்தம், சிவதீர்த்தம், குமாரதீர்த்தம், பாவநாச தீர்த்தம், தன்மதீர்த்தம், இந்தரதீர்த்தம், வருணதீர்த்தம், கிரகதீர்த்தம், சண்முகதீர்த்தம், சர்வதீர்த்தம், அக்னிதீர்த்தம், யமதீர்த்தம், சூர்ய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, செங்கமலை தீர்த்தம், வருணதீர்த்தம், சப்த கன்னியர் தீர்த்தம், நிருதி
தீர்த்தம், ஸப்தரிஷி தீர்த்தம், ராமதீர்த்தம், வாயு தீர்த்தம், ஈசான தீர்த்தம், கங்கை, யமுனை, சரஸ்வதி தீர்த்தம், ஜாம்பவந்த தீர்த்தம், மயேந்திர தீர்த்தம், தேவ தீர்த்தம் உள்பட, 33 தீர்த்தங்கள் கலசங்களில் வைத்து ஆவாஹனம் செய்யப்பட்டது.காலையில் வருண கலச பூஜை, தீர்த்த கலச பூஜைகளைத் தொடர்ந்து, இடுப்பளவு தண்ணீரில், 12 சிவாச்சாரியர்கள் வருணஜபம் செய்தனர். இந்த யாகத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.