உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூர் மழை வேண்டி சாகம்பரி ஹோமம்!

ப.வேலூர் மழை வேண்டி சாகம்பரி ஹோமம்!

ப.வேலூர்: மகா மாரியம்மன் கோவிலில், மழை வேண்டியும், பயிர்கள் செழிக்கவும் சாகம்பரி
ஹோம பெருவிழா நடந்தது.நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி யாகம் நடந்தது. காலை, 8 மணிக்கு மாரியம்மனுக்கு, 16 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பலவகையான காய்கனிகளால் அலங்கரிக்கப்பட்டு, ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேலும், காலை, 9 மணிக்கு சாகம்பரி கலச ஆவாகனம் ஜெபம், பாராயணம் மற்றும் ஹோமம் நடந்தது. பகல், 12 மணிக்கு கலச அபிஷேகம், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !