சின்னசேலம் பால் அபிஷேக விழா!
ADDED :4130 days ago
சின்னசேலம்:சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தில் உள்ள செல் வமுருகன் கோவிலில் ஆடி மாத இறுதி வெள்ளிக் கிழ மையை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், பூர்ணாஹூதி செய்து தீபராதனை நடந்தது. காலையில் பக்தர்கள் 108 பால்குடங்களுடன் சென்று சக்தி அழைத்தல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். மதியம் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.செல்வமுருகன் டிரஸ்ட் உறுப்பினர்கள் சீனிவாச கண்ணன், சுப்பரமணியன், தெய்வசிகாமணிஉட்பட பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.