சேலம் இஸ்கான் சார்பில் நாளை கோகுலாஷ்டமி கொண்டாட்டம்!
சேலம்: சேலம், இஸ்கான் சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நாளை கொண்டாடப்பட
உள்ளது.சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் மையத்தின் நிர்வாகி ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமான, இஸ்கான் அமைப்பின் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, நாளை (17ம் தேதி), சேலம் மூன்று ரோடு, ஜவஹர் மில் மைதானத்தில், வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. சேலத்தில், வாடகை வீட்டில்,பக்தர்களால் சிறு பிரச்சார மையமாக துவங்கிய இந்த இயக்கம், படிப்படியாக வளர்ந்து, தற்போது, கருப்பூரில், நான்கு ஏக்கர் பரப்பளவில், ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரம்மாண்டமான, ஒரு கோவில் கட்டப்பட்டு வருகிறது.கோவில் திருப்பணி நடப்பதால், ஜவஹர் மில் மைதானத்தில், ஒவ்வொரு ஆண்டும், இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை, 4.30 மணிக்கு துவங்கி, இரவு, 10.30 மணி வரை நடக்கிறது. பக்தர்கள் வந்து செல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கார் பார்க்கிங் உள்ளது.ஆன்மிக புத்தக ஸ்டால், பிரசாத ஸ்டால் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி,
கருப்பூரில் உள்ள கோவிலில், எவ்வித நிகழ்ச்சிகளும் நடக்காது. பக்தர்கள், ஜவஹர் மில்லில்
உருவாகியுள்ள கோவிலுக்கு வந்து, பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.